சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே கைது!
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு...
Published August 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமான இலஞ்சம் பெற்றதாக SSP சதீஸ் கமகே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விசாரணைகளில் இருந்து இந்த நிதி அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளிலும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.