தேயிலை தொழிற்சாலையொன்றில் தீ விபத்து
புசல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொச்சல் பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை
Published February 24, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
புசல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொச்சல் பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்று இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை பரவிய இந்தத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் புசல்லாவ பொலிஸார் இணைந்து கடும் போராட்டத்தின் மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் தொழிற்சாலைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் புசல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.