இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை ..........
Published February 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய நாளுக்கான பொதுவான வானிலை அறிக்கையை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி, மாத்தறை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.