சர்வதேச நீதி கோரி – கையெழுத்துப் போராட்டம்.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு...
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைக்குமான “சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு முன்பாக, வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஸ், மற்றும் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
“சர்வதேச நீதி கோரிய குறித்த கையெழுத்துப் போராட்டம் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

