அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம்! மொத்தத்தில் PTA மற்றும் PSTA வேண்டாம்!

பயங்கரவாத தடைக்கட்டச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும்

Published February 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

பயங்கரவாத தடைக்கட்டச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன் என்னுடன் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநகர உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் இவ் கண்டன போராட்டமானது மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு காந்திப் பூங்கா வரை எதிர்ப்புப் போராட்டமானது சென்றடைந்தது.

இந்த நாட்டின் ஜனநாயக அடித்தளத்தையும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கும் வகையில் அதுவும் குறிப்பாக தமிழருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட வரலாறு கொண்ட PTA சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதேபோல், புதிய பெயரில் அதே அடக்குமுறை சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தமிழ் மக்களின் உரிமைகள், நீதிமுறை பாதுகாப்பு, மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் உறுதிசெய்யப்பட வேண்டிய அவசியத்தை இந்த போராட்டம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தங்கள் ஜனநாயக குரலை வெளிப்படுத்தியமை பாராட்டத்தக்கது.

நீதியுடனும் மனித உரிமைகளுடனும் ஒத்திசைவான சட்டங்களே இந்த நாட்டிற்கு தேவையாகும். அடக்குமுறை சட்டங்கள் அல்ல என குறிப்பிட்டார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *