ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!
“ஒரு மாதத்திற்கும் மேலான காலத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில்
Published March 1, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
“ஒரு மாதத்திற்கும் மேலான காலத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எனவே, வரிசைகளில் காத்திருந்து எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை என அந்த கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழக்கம் போல் தடையின்றி முன்னெடுக்கப்படும் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை (02) தினத்திலும் வழமை போன்று எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும் என அதன் செயற்குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.”