எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வாகன வரிசை
நேற்று இரவு முதல் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வாகன
Published March 1, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேற்று இரவு முதல் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வாகன வரிசைகளைக் காணக்கூடியதாக இருந்தது.
இன்று அதிகாலை முதல் இதுவரையான காலப்பகுதியில் கம்பளை, கெலியோய, வெலிகல்ல மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அதேவேளை, அந்த இடங்களில் மக்கள் கன்களில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் எம்மால் காணக்கூடியதாக உள்ளது.