தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 8' சுற்றின் 51ஆவது லீக் ஆட்டத்தில் இன்று (01)

Published March 1, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் 51ஆவது லீக் ஆட்டத்தில் இன்று (01) தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக அணித் தலைவர் சிக்கந்தர் ராசா 73 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் குவேனா மபாக்கா மற்றும் கோர்பின் போஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், 154 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய டெவால்ட் பிரேவிஸ் 42 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் சிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *