MSC Magnifica கப்பலில் இருந்த இலங்கை பணியாளர் மீட்பு – தனிமைப்படுத்த நடவடிக்கை!

0

இத்தாலி நோக்கி பயணிக்கும் MSC மெக்னிஃபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளர் இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள நபர் பூஸ்ஸ கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த MSC மெக்னிஃபிகா என்ற பயணிகள் கப்பலில் சமயல் கலைஞராக பணிப்புரிந்த இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அநுர ஹேரத் என்ற சமயல் கலைஞர் தம்மை இலங்கையில் தரையிறங்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் 2700 பயணிகளுடன் கடந்த ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த எம்.எஸ்.சீ மெக்னிபிஷியா சுற்றுலா கப்பல் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதன்போது குறித்த நபர் மீட்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பூஸ்ஸ கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.