தொலைத்தொடர்பு அதிகாரிகள் – தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பு.

நாட்டின் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்....

Published August 18, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நாட்டின் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *