LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!
பல்சுவை

அருண்குமாரின் அடுத்த படத்தில் கமல்ஹாசன்

August 19, 2025 · Tamil Ceylon LK

தமிழ் திரையுலகின் வெற்றி பெற்ற இயக்குநர்களில் ஒருவரான அருண்குமாரின் அடுத்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்குமார், அதன்பிறகு விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் சித்தார்த் நடித்த ‘சித்தா’ என்ற படத்தையும் இயக்கினார். அதன் பின்னர் விக்ரம் நடித்த ‘வீரதீர சூரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய அவர், தற்போது அந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இந்த படத்தை முடித்தவுடன் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை அருண்குமார் இயக்க இருப்பதாகவும், அவர் கூறிய கதை கமல்ஹாசனுக்கு பிடித்துவிட்டது என்றும், கமல்ஹாசன் இந்த படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. திரைக்கதை அமைக்கும் பணியை தற்போது அருண்குமார் கவனித்து வருவதாகவும், விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வரும் நிலையில், இதை முடித்தவுடன் அவர் ‘இந்தியன் 3’ மற்றும் ‘ கல்கி 2898ஏடி’ படத்தின் 2ஆம் பாகம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›