LATEST
பொது மேலாளர் மீது நம்பிக்கை இழந்த தொழிற்சங்கங்கள்!இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!பொது மேலாளர் மீது நம்பிக்கை இழந்த தொழிற்சங்கங்கள்!இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!
உள்ளூர்

எல்ல – வெல்லவாய விபத்துக்கு கவனயீனமே காரணம்!

September 9, 2025 · Tamil Ceylon LK

எல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கு சாரதியின் கவனயீனமே காரணம் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

சாரதியினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் வீதியை விட்டு விலகி பேருந்து பள்ளத்துக்குள் வீழ்ந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

எல்ல பகுதியில் விசேட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ஆராய்ந்துள்ளனர்.

பதுளை, பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

25 வயதான ஒருவரே பேருந்தின் சாரதியாக செயற்பட்டுள்ளார். அவரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

மேலும் ›