ஓமானை வீழ்த்தியது இந்தியா – சாதனையுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி.

ஆசிய கிண்ண T20 தொடரின் ஷேக் ஜாயித் மைதானத்தில்...

Published September 20, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஆசிய கிண்ண T20 தொடரின் ஷேக் ஜாயித் மைதானத்தில் இடம்பெற்ற 12வதும் இறுதியுமான லீக் போட்டியில் இந்திய அணி ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 20 ஓவர்கள் நிறைவில் 188/8 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில், அபிஷேக் ஷர்மா அதிரடியாக 38 ஓட்டங்கள் (15 பந்துகள்), சஞ்சு சம்சன் அதிகபட்சமாக 56 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தனர்.

இந்நிலையில், ஓமான் அணி, 189 என்ற வெற்றி இலக்கை துரத்தியபோது, 20 ஓவர்களில் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஓமான் அணி சார்பில், அமீர் கலீம் அதிகபட்சமாக 64 ஓட்டங்களையும், ஹம்மட் மிர்ஷா 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்தியா அணி பெற்ற இவ் வெற்றியுடன் குழு A 3-0 வெற்றி என்ற சாதனையுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும், உலக ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கும் போட்டியான இந்தியா செப்டம்பர் 21 சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *