மனுஷ நாணயக்கார நாளை ஊழல் விசாரணைக்கு ஆஜர் !

2023 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Published September 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

2023 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார, நாளை (26) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இவ் விசாரணையானது 2023 நவம்பர் 5 திகதி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேல் அரசுடன் கையெழுத்திட்ட விவசாய வேலைவாய்ப்பு திட்ட ஒப்பந்தம் தொடர்பாகவும், ஊழல் சந்தேகங்கள் குறித்து விசாரணையோடு தொடர்புடையதாகும்.

முன்னர், இவ் விசாரணை குறித்து (08.09.2025) ஆணைக்குழுவில் ஆஜராக அவர் அழைக்கப்பட்ட போதும், வெளிநாட்டில் இருந்ததால் விசாரணையில் கலந்து கொள்ள தவறியிருந்தார்.

எனவே, நாளை காலை 9.30க்கு, கொழும்பு ஜாவத்த வீதி பழைய தேசிய அடையாள அட்டை அலுவலகத்தில் அமைந்துள்ள விசாரணைப் பிரிவு – IV இல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *