தியாக தீபம் திலீபன் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில்...

Published September 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனிக் நினைவுத் திடலில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இடம்பெற்றது.

ஐந்து கோரிக்கையை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்து 38 ஆண்டுகள் கடந்த நிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்செ.கஜேநதிரன், மாநகர மேயர் சு.காண்டீபன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *