LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
விளையாட்டு

பங்களாதேஷை வென்றது பாகிஸ்தான் – இறுதிப்போட்டிக்கு தகுதி.

September 26, 2025 · Tamil Ceylon LK

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் – 4 சுற்றில் டுபாயில் நேற்று இடம்பெற்ற பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது.

> துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில்,

– Mohammad Haris 31 ஓட்டங்களையும்,

– Mohammad Nawaz 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

> பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில்,

Taskin Ahmed 03 விக்கெட்டுக்களையும், Mahedi Hasan, Rishad Hossain ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை சந்தித்தது.

> துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில்,

– Shamim Hossain மாத்திரமே அதிகட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

> பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில்,

– Shaheen Shah Afridi மற்றும் Haris Rauf ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று 2025 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, வருகின்ற 28 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›