மின்சார கட்டண திருத்தம் இறுதி தீர்மானம் விரைவில்!

2025ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான...

Published October 9, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

2025ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்கள் கலந்தாய்வுகளில், சுமார் 500 பேர் தங்கள் கருத்துகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் (PUCSL) பதிவு செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி இந்தக் கருத்து சேகரிப்பு நடவடிக்கைகள் செப்டம்பர் 18 திகதி ஆரம்பமாகி, இறுதி அமர்வு மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு, நேற்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை மின்சார சபை (CEB)சமர்ப்பித்த தனது முன்மொழிவில், மின்சார கட்டணங்களை 6.8 சதவீதம் உயர்த்துவதற்கு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *