இராணுவ தினத்தில் 5 பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு!
நாட்டின் 76வது இராணுவ தினத்தை முன்னிட்டு...
Published October 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் 76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆகியோரின் பரிந்துரையின் பேரில்,
போரில் காயமடைந்த ஐந்து பிரிகேடியர்கள், அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் மேஜர் ஜெனரல் பதவிக்கு ஜனாதிபதி அனுர திசாநாயக்கவால் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.