பிரதமர் ஹரிணி சீனா விஜயம்.
"ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான...
Published October 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
“ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பீஜிங்கில் பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (11) இரவு சீனாவுக்கு புறப்பட்டு செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் அமரசூரிய ஒரு முக்கிய உரையை நிகழ்த்துவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.