LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
Breaking

சட்டத்தரணி வன்னிநாயக்க நீதிமன்றில் ஆஜராகத் தயார் !

October 15, 2025 · Tamil Ceylon LK

பொலிஸாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, இன்று (15) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி குணரத்ன வன்னிநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, ​​வன்னிநாயக்க சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸ் முஸ்தபா இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

அப்போது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய, தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி மனுதாரரின் சட்டத்தரணியால் கோரும் இடைக்கால கோரிக்கையை தனது நீதிமன்றத்தால் ஏற்க முடியாது என்று கூறினார். 

மனுதாரரின் சட்டத்தரணி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது பொருத்தமானது என்றும் தலைமை நீதிபதி கூறினார். 

பின்னர், இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க இந்த மனுவை நாளை (16) பிற்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு திகதியிட்டது.

Related Stories

மேலும் ›