சட்டத்தரணி வன்னிநாயக்க மனு விசாரணை – நீதிமன்றம் திகதி நியமனம்.
சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, தன்னை கைது செய்வதைத் தடுக்க...
Published October 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
இந்த மனு இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையின் பின்னர் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது, மனுதாரர் சட்டத்தரணி வன்னிநாயக்க நேற்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அறிவித்தார்.