அரசாங்க வைத்தியர்கள் நாடளாவிய போராட்டம் அறிவிப்பு.
நாட்டில் தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...
Published October 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
-
இது குறித்து GMOA செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவிக்கையில்,
இம் முறைமை இன்று (30) நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் ஏற்படக்கூடிய சேவை முடக்கத்திற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.