LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
உள்ளூர்

“மலையகப் பெருந்தலைவர் அமரர்.சௌமியமூர்த்தி தொண்டமான்” அவர்களின் 26 வது சிரார்த்த தினம்.

October 30, 2025 · Tamil Ceylon LK

கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும், தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர்களான கணபதி கனராஜ், அனுசியா சிவராஜா, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உப்பட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார். முக்கிய பல அமைச்சுகளை வகித்துள்ளார். இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயற்பட்டார்.

Related Stories

மேலும் ›