LATEST
22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!
விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி – இந்தியா மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி !

October 31, 2025 · Tamil Ceylon LK

13 வது மகளிர் உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பில் துடுப்பாட்டத்த்தில்,

  • Phoebe Litchfield அதிகபட்சமாக 119 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் பதிலுக்கு 339 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில்,

  • Jemimah Rodrigues ஆட்டழிக்காமல் 127 ஓட்டங்களை பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதேநேரம் நேற்று இடம்பெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்திய மகளிர் அணி மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கான மகளிர் உலகக்கிண்ண இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›