LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
பல்சுவை

ஆட்டோகிராப் படம்  ரீ ரிலீஸ் ஆகிறது

November 3, 2025 · Tamil Ceylon LK

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் டிஜிட்டலில் புத்தம்புது பொலிவுடன் எதிர்வரும் 14ஆம் திகதி ரீ ரிலீஸ் ஆகிறது.

2004ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 21 ஆண்டுகளுக்கு பின் ரீ ரிலீஸ் ஆகின்றது.

அப்போது ஆட்டோகிராப் படத்தின் கதையும், பாடல்களும், சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டன.

குறிப்பாக, பரத்வாஜின் ஒவ்வொரு பூக்களும், ஞாபகம் வருதே பாடலும், படத்தின் திரைக்கதையும் வெகுவாக மக்களிடம் போய் சேர்த்தன.

சிறந்த படம், சிறந்த பின்னணி பாடகி (சித்ரா), சிறந்த பாடலாசிரியர் ( பா.விஜய்) என 3 தேசிய விருதுகளை ஆட்டோகிராப் பெற்றது.

பல தனியார் விருதுகளையும் அள்ளியது. இன்றும் ஆட்டோகிராப் சீன்களும், கதையும் பேசப்படும் நிலையில், படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் சேரன். இந்த படத்தை தவிர, கமலின் நாயகன் படமும் நவம்பர் 6ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது.

Related Stories

மேலும் ›