வீபரிதமான கிரிக்கெட் விளையாட்டு : ஒருவர் பலி
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அழுதெபொல வலகம்பா கல்லூரி மைதானத்தில்
Published November 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அழுதெபொல வலகம்பா கல்லூரி மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்றின் போது இடம்பெற்ற விபத்தில் விளையாட்டு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பந்தை பிடியெடுக்க முயற்சித்த போது வீரர்கள் இருவர் முகத்திற்கு நேராக மோதிக்கொண்டுள்ளனர்.
இதில் 41 வயதான தனுஷ்க தேவிந்த பெரேரா என்ற வீரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தினையடுத்து மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் மோதிய மற்றைய வீரருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.