LATEST
மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!
உள்ளூர்

கெலிஓயா கரமட விகாரைக்கு அருகில் பேருந்து விபத்து

November 12, 2025 · Tamil Ceylon LK

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, கரமட விகாரைக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடைமீது மோதியுள்ளது.

அத்துடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றையும் மோதி தள்ளி முன்சென்று, வீடொன்றின் மதில் மீது மோதி நின்றுள்ளது.

இதன்போது கடையில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து வயது சிறுமி மற்றும் ஆணொருவர் காயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Stories

மேலும் ›