அதிகமாகும் விசர் நாய்க்கடி
நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விசர்நாய்க்கடிக்கு
Published November 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விசர்நாய்க்கடிக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக விலங்கு நலன் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வருடமொன்றில் 250,000க்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகுவதாக சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.