பிரான்ஸ் நாட்டில் சமூக ஊடகங்களுக்கு தடை
2026ஆம் ஆண்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை
Published January 1, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026ஆம் ஆண்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் இரண்டாவது முறையாக முயற்சிக்கும் என நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
இள வயதுடைய குழந்தைகள் படிக்கும் பாடசாலைகளில் கையடக்க தொலைப்பேசிகளுக்கு அந்நாடு ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், ஆனால் அவை எப்போதும் கண்டிப்பாக அமுல்ப்படுத்தப்படவில்லை.
பிரெஞ்சு அரசாங்கமும் 2023இல் 15 வயதுடைய “டிஜிட்டல் சட்ட வயதை” அறிமுகப்படுத்த முயற்சித்தது, ஆனால் அந்த சட்டம் ஐரோப்பிய ஒன்றிய விதிகளுடன் முரண்பட்டது.