தொடரை வென்ற இங்கிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 2 – 0 என இங்கிலாந்து
Published February 2, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 2 – 0 என இங்கிலாந்து அணி வெற்றிக்கொண்டது.
தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்றது. ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் நேற்றைய 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. குறித்த இலக்கை 17 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிகொண்டது.