LATEST
துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்
விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இத்தாலி பந்துவீச்சு தேர்வு

February 19, 2026 · Tamil Ceylon LK

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது லீக் போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று (19) பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (19) காலை ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணித் தலைவர் ஹாரி மனென்டி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி நடப்புத் தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது.

அத்துடன், ‘குரூப் சி’ புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ஏற்கனவே ‘சுப்பர் 8’ சுற்றுக்கான தகுதியையும் உறுதி செய்துள்ளது.

மறுபுறம், டி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாகக் களமிறங்கியுள்ள இத்தாலி அணி, தொடரிலிருந்து வெளியேறியிருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுக்களால் வரலாற்று வெற்றி பெற்ற இத்தாலி, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 203 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டும்போது 178 ஓட்டங்களைக் குவித்து கடும் நெருக்கடி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது வெற்றிப் பயணத்தை 4-0 எனத் தொடர முயற்சிக்கும். அதேவேளை, இத்தாலி அணி எந்தவித அழுத்தமுமின்றி சுதந்திரமாக விளையாடி, தனது கன்னி உலகக் கிண்ணப் பயணத்தை ஒரு சிறந்த ஆட்டத்துடன் நிறைவு செய்யக் காத்திருக்கிறது. கொல்கத்தா மைதானம் துடுப்பாட்டத்திற்குச் சாதகமானது என்பதால் இப்போட்டியில் ஓட்ட மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

மேலும் ›