நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை
நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல்
Published February 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.