LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!
உள்ளூர்

ஜனாதிபதியை தகாத வார்த்தைகளால் திட்டியவர்களுக்கு விளக்கமறியல்

February 19, 2026 · Tamil Ceylon LK

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஆசனப்பட்டி இன்றி பஸ் வண்டியை அதிவேக வீதிக்குள் செலுத்த முயற்சித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.

அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆசனப்பட்டி அணியாத சம்பவத்தின் போது ஜனாதிபதியை அவதூறாகத் திட்டியவாறும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நடந்துகொண்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.

இது தொடர்பில் ஐவர் பேலியகொடை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, கடான பொலிஸார் ஊடாக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.

Related Stories

மேலும் ›