இன்று சில இடங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் ......
Published February 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, பதுளை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.