LATEST
மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!
உள்ளூர்

பாதுகாப்பு துறையில் இணக்கம் : அமெரிக்க கடற்படை தளபதி சந்திப்பு

February 20, 2026 · Tamil Ceylon LK

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கப்பற்படையின் கட்டளைத்தளபதியான அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கையின்பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வுபெற்ற) எயா வைஸ்மாஷல் சம்பத் துயகொன்தவை நேற்று (19) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இறையாண்மையைப் பாதுகாத்து பிராந்தியப் பாதுகாப்பை பலப்படுத்துகின்ற வெளிப்படையான பங்காண்மையினை மீள வலியுறுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மைக்கு உதவி செய்வதற்காக கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துதல் என்பன தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

எமது வாண்மைத்துவ படைகளுக்கிடையிலான பிணைப்புகளை பலப்படுத்துதல். நாடு கடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்கும் தன்மையினை மேம்படுத்துதல் மற்றும் ஒரு பாதுகாப்பான இந்து சமுத்திரத்திற்கான நீண்டகால உறுதிப்பாடு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்றன இந்த சந்திப்பின் எதிர்பார்ப்பதாக கருதப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›