LATEST
தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!
உள்ளூர்

60 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது

February 23, 2026 · Tamil Ceylon LK

60 லட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (23) அதிகாலை 03.50 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த மூன்று பயணப் பொதிகளில் (Luggage) மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் (200 பக்கெட்டுகள்) கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபர் இன்று (23) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Stories

மேலும் ›