LATEST
மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!
உள்ளூர்

2026 T-20 உலகக்கோப்பை கிரிக்கெட்- விசேட போக்குவரத்து திட்டம்

February 25, 2026 · Tamil Ceylon LK

2026 டி -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையே இன்று (25) நடைபெறவுள்ள முக்கியமான போட்டியை முன்னிட்டு, கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக அதிகளவிலான ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கொழும்பு போக்குவரத்துப் பிரிவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வின்சென்ட் பெரேரா மாவத்தை (கிராண்ட்பாஸ் வீதி), பிரிட்டோ பாபாபுல்லே பாலம் சந்தி வழியாக பாபாபுல்லே வீதிக்கு நுழைதல்.

பாபாபுல்லே பாலம் அருகில் இருந்து விளையாட்டரங்கம் நோக்கி நுழைதல்.

செபாஸ்டியன் கால்வாய் வீதி மெல்வத்த பாலம் அருகில் இருந்து விளையாட்டரங்கம் நோக்கி நுழைதல்.

100 அடி வீதி, கோயில் வீதி சந்தி வழியாக விளையாட்டரங்கம் நோக்கி நுழைதல்.

மாலிகாவத்தை ஒழுங்கை, விளையாட்டரங்கத்திற்கு அருகில் உள்ள பக்க வீதி வழியாக நுழைதல்.

சத்தர்ம மாவத்தை கோயில் வீதி (கெத்தராம வீதி) சந்தி வழியாக கோயில் வீதிக்கு நுழைதல்.

ரசிகர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பின்வரும் பொருட்கள் விளையாட்டரங்கிற்குள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது:

  • பெரிய அளவிலான பயணப் பைகள்

  • கண்ணாடிப் போத்தல்கள்

  • ட்ரோன் (Drone) கருவிகள்

  • சிறிய கத்திகள்

  • போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள்

போட்டி ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே சி.சி.டி.வி கண்காணிப்பு, உடல் பரிசோதனை மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், பாதுகாப்புத் தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

மேலும் ›