இலங்கைக்கு உதவ கியூபா தயார்

ஜே.வி.பி (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான புதிய கியூபா தூதுவர்

Published March 3, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

ஜே.வி.பி (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான புதிய கியூபா தூதுவர் பெட்ரிசியா பெகோ குவேரா (Patricia Pego Guerra) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (03) காலை பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் , ஜே.வி.பி இற்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.

இலங்கையின் சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக கியூபா தூதுவர் உறுதியளித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *