LATEST
மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!
உள்ளூர்

QR எரிபொருள் பிரச்சனை குறித்து கலந்துரையாடல் : இராமலிங்கம் சந்திரசேகர்

March 16, 2026 · Tamil Ceylon LK

நேற்று இரவு 8 மணிக்கு மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் நடைபெற்றது. 

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் எரிபொருள் தொடர்பில் சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறை (QR Code) தீவகப்பகுதி மக்கள் பயன்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகள், நீண்ட தூரங்களுக்கு பயணிக்கும் பாரஊர்திகளுக்கான எரிபொருள் விநியோக பொறிமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

Related Stories

மேலும் ›