British Airways விமான சேவைகள் தொடர்பில் புதிய தீர்மானம்
வரவிருக்கும் குளிர்காலத்தில் British Airways இலங்கைக்கு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
Published March 18, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வரவிருக்கும் குளிர்காலத்தில் British Airways இலங்கைக்கு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.
இந்த விமான சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனை நேற்று (17) ஆரம்பமானது. இலங்கையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கும் ஒரே விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாத்திரமே தற்போது காணப்படுகின்றது.