அநுரவுக்கும் – மோடிக்கும் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்.........

Published March 25, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் தமது எக்‌ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். 

இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள் என்ற ரீதியில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் ஒன்றிணைந்து நெருக்கமாகச் செயற்படுவதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *