LATEST
துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்
உள்ளூர்

பெருந்தோட்ட மாணவர்களுக்கு CEWET புலமைப்பரிசில்கள்

March 28, 2026 · Tamil Ceylon LK

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) வழங்கப்படும் கல்விப்புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்கள் அல்லது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது தொழில்நுட்பக் கல்வியினைத் தொடரும் மாணவர்கள் இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

அத்துடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் குறைந்தபட்சம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். விண்ணப்பதாரிகள் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பப் படிவங்களை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையதளமான www.hcicolombo.gov.in இலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அத்துடன், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்அல்லது கண்டியிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›