LATEST
தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!
உள்ளூர்

போதைப்பொருட்களுடன் சிக்கிய நெடுநாள் மீன்பிடி படகு

April 17, 2026 · Tamil Ceylon LK

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகு மற்றும் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்கள் இன்று (17) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் நீண்டதூர நடவடிக்கைக் கப்பல் பிரிவினர் நேற்று (16) ஆழ்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த நெடுநாள் மீன்பிடி படகை வழிமறித்து சோதனையிட்டனர்.

சோதனையின் போது, அந்தப் படகில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, படகிலிருந்த நான்கு சந்தேகநபர்களையும் கடற்படையினர் உடனடியாகக் கைது செய்ததுடன் படகையும் கைப்பற்றினர்

கடற்படையினரின் பாதுகாப்பின் கீழ் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த படகில் உள்ள பொதிகளை விரிவாகப் பரிசோதிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›