LATEST
தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!
உள்ளூர்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு காணி மாற்றம்!

May 18, 2026 · Tamil Ceylon LK

தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அதன் இணைப்பாளர் சசிந்து பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நடைபெற்ற கலந்துரையாடலில் இக்காணியை கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதால், இந்த நேரத்தில் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி செல்வதற்குத் தாங்கள் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

மல்வானை காணியை வரும் நாட்களில் கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார். 

நாங்கள் கோரிய விடயத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது. 

அந்தப் பதிலைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் மல்வானை காணியில் இருந்து வெளியேற நாங்கள் தீர்மானித்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›