சில பகுதிகளில் இன்று 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்ததன்படி, கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று இரவு 7.00 மணி முதல் நாளை (28) காலை 7.00 மணி வரை இந்த நீர் வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய நீர்க்குழாய்களை மாற்றி அமைக்கும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
Follow & Share




