LATEST
கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!பேருந்து கட்டண மாற்றம் குறித்து இன்று முக்கிய எதிர்பார்ப்பு!எரிபொருள் விலை குறைப்புகொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!பேருந்து கட்டண மாற்றம் குறித்து இன்று முக்கிய எதிர்பார்ப்பு!எரிபொருள் விலை குறைப்பு
உள்ளூர்

தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!

June 30, 2026 · Tamil Ceylon LK

தந்திரிமலை ரஜமகா விகாரைக்கு நேற்று (29)பிற்பகல் வருகை தந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஜனாதிபதி மின் விளக்குகளை ஏற்றி ஆலோக பூஜையை ஆரம்பித்து வைத்தார்.

தந்திரிமலை ரஜமகா விகாராதிபதி, வடகிழக்கு மாகாணங்களின் உப பிரதம சங்கநாயக்கர் தந்திரிமலே சந்தரதன நாயக்க தேரரின் அனுசாசனத்துடன் இந்த ஆலோக பூஜை நடத்தப்படுகிறது.

இதனுடன் இணைந்ததாக மலர் விளக்கு பெரஹரா மற்றும் பௌத்த பக்தி கீத நிகழ்ச்சியும் இங்கு நடத்தப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, மாராளுமன்ற உறுப்பினர் சேன நாணாயக்கார, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரஞ்சன ஜயசிங்க, அனுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, மஹவிலச்சிய பிரதேச செயலாளர் சுரிதா பெரேரா, மத்திய நுவரகம்பலாத்த பிரதேச சபையின் தலைவர் சந்திரகுப்த வன்னிநாயக்க, தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் த சில்வா மற்றும் விஜய பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன உள்ளிட்ட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Stories

மேலும் ›