LATEST
பொது மேலாளர் மீது நம்பிக்கை இழந்த தொழிற்சங்கங்கள்!இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!பொது மேலாளர் மீது நம்பிக்கை இழந்த தொழிற்சங்கங்கள்!இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!
உள்ளூர்

இணைய சேவையின் ஊடாக போதை விற்பனை!

May 29, 2026 · Tamil Ceylon LK

யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 1800 போதை மாத்திரைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

இணைய சேவையின் ஊடாக பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதையடுத்து பொதி விநியோக சேவையின் ஊடாக கொழும்பில் இருந்து பொதிசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றுக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர். 

அதில் 1800 போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›