LATEST
பொது மேலாளர் மீது நம்பிக்கை இழந்த தொழிற்சங்கங்கள்!இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!பொது மேலாளர் மீது நம்பிக்கை இழந்த தொழிற்சங்கங்கள்!இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!
உள்ளூர்

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அரசியல் பின்னணி ஒழிப்பு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உரை!

May 29, 2026 · Tamil Ceylon LK

இன்று இலங்கையில் முதன்முறையாக போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் ஆதரவு தகர்க்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்கள் யாருக்கும் இனி அரசியல் ஆதரவு கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்.

இன்று (29) முற்பகல் நிகவெரட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கணேவெவ புராதன விகாரையின் “ 2026 வைசாக்ய” நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய சமூகம் பெறுமதியானவை எனக் கருதுபவை , உண்மையான பெறுமதிகள் அல்ல என்பதையும், நாட்டிற்கு புதிய விழுமியக் கட்டமைப்பையும் பெறுமதிகள் கட்டமைப்பையும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து கலாசாரங்களையும் தனித்துவங்களையும் மதிக்கின்ற, ஒத்துணர்வு கொண்ட சமூகத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

எதிர்கால சமூகத்தை உருவாக்குபவர்களான தற்போதைய இளைய தலைமுறையினரை நல்ல தலைமுறையாகக் கட்டியெழுப்புவதில், இளம் பௌத்த தேரராக வண. கத்னோருவே சிறிதம்ம தேரர் ஆற்றிவரும் புத்தசாசன மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டினார்.

பிரபல தர்ம சொற்பொழிவாளர், வண. கத்னோருவே சிறிதம்ம தேரரின் தர்ம போதனைகளை அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்பட்ட “திவி மங் சதஹம்” நூல் வெளியீடும், விகாரையின் கணனி செயலி அறிமுகமும் இதன்போது நடைபெற்றது. அத்துடன், கணேவெவ புராதன விகாரையின் புதிய மண்டபம், அரச மரத்தைச் சுற்றியுள்ள மதில், மணிக் கோபுரம் மற்றும் தேரர்களுக்கு உணவு பரிமாறும் மண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இதற்கு இணையாக இடம்பெற்றன.

Related Stories

மேலும் ›