LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
விளையாட்டு

லக்னோ கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்.

May 30, 2026 · Tamil Ceylon LK

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைவர் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.

அணி தலைவர் பதவியிலிருந்து விலகும் பண்ட்டின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக லக்னோ அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த சீசனில் லக்னோ அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தது.

இந்த தொடரில் துடுப்பாட்டத்திலும் ரிஷப் பண்ட், 14 போட்டிகளில் 138.05 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 312 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

கடந்த இரண்டு தொடர்களில் லக்னோ அணியின் தலைவராக இருந்த பண்ட், 10 வெற்றிகளையும் 18 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். துடுப்பாட்டத்தில் மொத்தம் 581 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ரிஷப் பண்ட் விலகியதை அடுத்து, அணியை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும், லக்னோ அணியின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அணியின் கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›