LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
விளையாட்டு

பயிற்சிக்கு குறைந்த காலம்; ஆனால் நம்பிக்கை குறையவில்லை – ஈரான் அணி.

June 3, 2026 · Tamil Ceylon LK

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரான் கால்பந்து அணி தனது தொடர்ச்சியான 4-வது உலகக் கிண்ணத்தொடரில் பங்கேற்கத் தயாராகி வருகிறது.

எனினும், நிலவும் போர்ச் சூழல் காரணமாக வீரர்களின் உடற்தகுதி மற்றும் ஆட்டத் திறனை மேம்படுத்த தமக்கு மிகக் குறைந்த கால அவகாசமே கிடைத்துள்ளதாக ஈரானின் பயிற்சியாளர் அமீர் கலேனோய் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணியின் பெரும்பாலான வீரர்கள் உள்நாட்டுப் போட்டித் தொடரான ‘பாரசீக வளைகுடா புரோ லீக்’ (Pநசளயைn புரடக Pசழ டுநயபரந) கழகங்களைச் சேர்ந்தவர்களாவர்.

போர் பதற்றம் காரணமாக குறித்த கழகங்களின் உள்நாட்டுத் தொடர் பல வாரங்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்ததால், வீரர்களின் பயிற்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த உலகக் கிண்ணத் தொடரே அணியிலுள்ள பல மூத்த வீரர்களின் கடைசி சர்வதேசத் தொடராக இருக்கும் என்று பயிற்சியாளர் கலேனோய் ஒப்புக்கொண்டுள்ளார்.

2026, ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், ஈரான் அணி நியூசிலாந்து, பெல்ஜியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது.

1978 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில்; அறிமுகமான ஈரான் அணி, இதுவரை 6 முறை உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ளது.

எனினும், அது, விளையாடிய 18 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, ஒவ்வொரு முறையும் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

எனினும், இந்த முறை, ஈரான் அணி முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய போர் சூழல் அணிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Related Stories

மேலும் ›